பாமக அதிருப்தி: புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறதா?
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணியில் கழட்டி விட்டிருப்பது பாமகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை அதிமுக - பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும் என இன்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழகத்தில் கூட்டணி வைத்துவிட்டு புதுச்சேரியில் கழட்டிவிட்டிருப்பது பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.