புதுச்சேரி தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. காரணம் என்ன?
தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரி சட்டமன்றத்திற்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக - பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஒரு கூட்டணிலும் திமுக - காங்கிரஸ் ஒரு கூட்டணியிலும் தேர்தலைச் சந்திக்கின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாக எம்.எல்.ஏக்கள் ராஜினாமால் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தன. தற்போது காங்கிரஸ் 15 இடங்களிலும் திமுக 13 இடங்களிலும் கூட்டணி கட்சிகள் இரண்டு இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால் அதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் பெயர் இடம்பெறவில்லை.
புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் நாராயணசாமி தேர்தலில் போட்டியிட மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.