புதுச்சேரியில் வேட்புமனுக்களை வாபஸ் பெற்ற பாமக

election dmk candidate puducheery
By Jon Mar 23, 2021 06:27 PM GMT
Report

புதுச்சேரியில் போட்டியிட இருந்த தொகுதிகளில் இருந்து பாமக வாபஸ் பெற்றுள்ளது. புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட 10 தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யாததால், 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட பாமக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், பாமக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 10 வேட்பாளர்களும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

ஆட்சி அமைந்தவுடன் உரிய மரியாதை அளிக்கப்படும் என பாஜக தலைமை உறுதி அளித்ததாக பாமக அமைப்பாளர் தன்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.