பாஜகவுக்கு 10 தொகுதிகளா! சூடு பறக்கும் புதுவை தேர்தல்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக மேலிட பொறுப்பாளர் சுரானா அறிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தை புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நேற்றிரவு கூட்டினர்.
இந்த கூட்டத்தில் ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்தும், முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமி என்று மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும், ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் பாஜக-அதிமுகவிற்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.