புதுச்சேரி அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
election
list
candidate
aiadmk
puducheery
By Jon
புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், 5 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உப்பளம் தொகுதியில் அன்பழகனும், உருளையன்பேட்டையில் ஓம்சக்தி சேகரும், முத்தியால்பேட்டையில் வையாபுரி மணிகண்டனும், முதலியார்பேட்டையில் பாஸ்கரும், காரைக்கால் தெற்கில் அசனாவும் களம் காண்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அதிமுக அறிவித்திருக்கும் 5 வேட்பாளர்களில் ஓம்சக்தி சேகர் தவிர, அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசனா ஆகிய 4 பேர் நடப்பு எம்எல்ஏக்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.