புதுக்கோட்டை மாணவர் சீனாவில் உயிரிழப்பு.. கொரோனா பாதிப்பா ?
புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் சீனா சென்றிருந்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் தமிழக மாணவர்
சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு அதே மருத்துவமனையில் மருத்துவராக பயிற்சி பெற்று வந்தார் புதுக்கோட்டையை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர்.
இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்து விட்டதாகவும் சீனாவிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன
மரணத்தால் பரபரப்பு
இந்த நிலையில் ஷேக் அப்துல்லாவின் உடலை சீனாவிலிருந்து இந்தியா கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்
சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற மருத்துவ மாணவர் கொரோனாவால் உயிரிழந்தாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே அவரது மரணத்திற்கான காரணம் தெரியும் என்றும் கூறப்படுகிறது.