புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு

pudhuchery schools to be shut from 10th jan
By Swetha Subash Jan 09, 2022 12:25 PM GMT
Report

அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு.

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்

நாளை முதல் (10-01-2022) மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.