மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோவில் கொழுக்கட்டை படையல்

Ganesh Chaturthi Tiruchirappalli
By Thahir Aug 31, 2022 06:58 AM GMT
Report

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள விநாயகருக்கு 150 கிலோவில் கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை கீழ் உள்ள மாணிக்க விநாயகர் ஆலயம் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் ஆலயத்தில் தலா 75 கிலோ எடையுள்ள 150 கிலோ எடையுள்ள மேகா கொழுக்கட்டை படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மேலும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திருச்சி மலைக்கோட்டையில் கொழுக்கட்டை படைக்கும் நிகழ்வு எடை குறைக்கப்பட்டு பொதுமக்கள் இன்றி நடைபெற்று வந்தது.

மலைக்கோட்டை விநாயகருக்கு  150 கிலோவில் கொழுக்கட்டை படையல் | Pudding At 150 Kg For Malaikottai Ganesha

இந்நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதியில் தலா 75 என 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை தற்பொழுது படைக்கப்பட்டது.

இந்த கொழுக்கட்டையில் அரிசி மாவு, வெள்ளம், பொட்டுக்கடலை, எள் போன்றவை சேர்த்து மடப்பள்ளியில் தயாராகப்பட்டு மடப்பள்ளியில் இருந்து தற்போது எடுத்துவரப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கும் மாணிக்க விநாயகர்க்கும் படைக்கப்பட்டது.

தற்போது கொரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் காரணமாக இன்று உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இதையொட்டி காலை முதலே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.