ஆக்கப்பூர்வமான அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் - ஊடகங்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

media news mkstalin
By Irumporai May 16, 2021 01:42 PM GMT
Report

அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்  ஊடகங்களை என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

.செய்தி ஊடக ஆசிரியர்களுடன் ஆலோசனை  கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்:

கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது.

மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம் ஆகவே, கொரோனா செய்திகளை எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், ஆவின் பால் ரூ.6 விலை உயர்த்தி ரூ.3 குறைக்கப்படுவதாக செய்தி பரவுகிறது.

ஆக்கப்பூர்வமான அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் - ஊடகங்களுக்கு  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! | Publish The News Mk Stalin S Appeal To The Media

அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார் வரவே, கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது.

ஆனால் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என செய்தி பரவுகிறது. பிற மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பதிவு மட்டும் போதும் என்று அரசு அறிவித்தது. ஆனால், இபாஸ் கட்டாயம் என செய்தி வெளியாகிறது.

ஆகவே இது போன்ற செய்திகளை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள், அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் என தெரிவித்தார்.