கொரோனா முழு ஊரடங்கிலும் ஒசூரில் பொறுப்பின்றி சுற்றிவரும் மக்கள்
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒசூரில் மட்டும் 250 முதல் 300 பேர் வரை பொதுமக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
குறிப்பாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பூங்காக்கள், உழவர் சந்தைகள், பேருந்துகள் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஒசூர் நகரில் நாளொன்றுக்கு 250 முதல் 300 வரை பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளபோதும் ஓசூர் மாநகரில் பொதுமக்கள் அச்சமின்றி டீக்கடை மட்டன், சிக்கன் கடைகள் மட்டுமல்லாமல் அத்தியாவசிய தேவை இல்லாத பூக்கடை உள்ளிட்டவைகளை திறந்துள்ளனர்.
ரோந்தில் ஈடுபட்டுள்ள போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் உடனடியாக அனைத்து கடைகளையும் மூட வேண்டும் வெளியில் சுற்றி வரும் பொதுமக்களை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.