சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் வாகனங்கள் - காவல்துறை தீவிர சோதனை
சென்னை பாடியில் 12 மணியைக் கடந்து திடீரென அதிகரித்த வாகன போக்குவரத்து. தேவையில்லாமல் ஊரடங்கு நேரத்தில் சாலையில் சுற்றி திரிந்த 116 இருசக்கர வாகனங்கள் 2 மணி நேரத்தில் பறிமுதல்.
சென்னை பாடி மேம்பாலம் சரவணா ஸ்டோர் அருகே அதிரடியான வாகன சோதனையில் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள்.
காவல் துறை டிஜிபியின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றி திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இதுவரையில் 116 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து இருசக்கர வாகனங்களை வழக்குப் பதிவு செய்து காவல் நிலையம் வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் 12 மணியைக் கடந்து பாடி பகுதியில் செயல்பட்டு வந்த பிரியாணி கடைகளையும் மூட அறிவுறுத்தினார் ஆய்வாளர் கிருபாநிதி.