கன்னியாகுமரியில் ஊரடங்கை மீறும் பொது மக்கள்: மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம்
குமரி மாவட்டத்தில் கனமழை எதிரொலி. இரணியல் தலக்குளம் பகுதிகளில் ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டமாக சென்று வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மீண்டும் குமரியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் தொடரும் கனமழை காரணமாக ஆறுகள் குளங்கள் நீர்நிலைகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை மறந்து மழைநீரை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொழுதை களிக்க கூடி வருகின்றனர்.
மழை நீரால் நிரம்பிய குளங்களை காண ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை மறந்து மக்கள் கூட்டம் கூடுவதால் குமரி மாவட்டத்தில் குறைந்து வரும் கொரொனா நோய் தொற்று மீண்டும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் கவனமுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.