வாகன தணிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க கூடுதல் காவல் ஆணையர் வேண்டுகோள்
ஊரடங்கின் போது வாகன தணிக்கைக்கு பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிட சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் ஈகா திரையங்கம் சிக்னலில் போக்குவரத்து காவலர்களுக்கான மருத்துவ முகாமை புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையை பொறுத்தவரை 115 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் சாலைகளில் வரும் வாகனங்கள் இ-பதிவு பெற்று வருகிறதா என கண்காணிப்பது காவல் துறையினரின் கடமை. அதை பொதுமக்கள் இடைஞ்சலாக பார்க்கக்கூடாது.
மேலும் காவல் துறையினருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.