மாண்டஸ் புயல் எதிரொலி ; தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள்

Chennai Tamil Nadu Police TN Weather Weather Mandous Cyclone
By Thahir Dec 09, 2022 05:58 AM GMT
Report

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

13 கி.மீ வேகத்தில் நெருங்கும் மாண்டஸ் புயல் 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.

கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.

பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 260 கிமீ தொலையில் உள்ளது.இதையடுத்து காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வேண்டுகோள் 

மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கிமீ துாரத்திலும், காரைக்காலில் இருந்து 200 கிமீ துாரத்தில் நிலவி வருகிறது.

மாண்டஸ் புயல் எதிரொலி ; தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள் | Public Should Not Come Out Unnecessarily Police

இந்த நிலையில் மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறு சென்னை போக்குவரத்துக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.