? Live: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி தற்போது கரையை கடக்க துவங்கி இருக்கிறது.
மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர் முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருகிறது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது வரை காட்டுப்பாக்கம் பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் பாலச்சந்திரன் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
புயலின் முன் பகுதி காரைக்கால் வந்தடைந்துள்ளது மையப் பகுதி தற்போது வரை கடலுக்கு வெளியே உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்