படம் பாக்கிறவங்களுக்கு பிரியாணி : சிறப்பான மக்கள் பணி,வாழ்க திராவிட மாடல் .. சீமான் கிண்டல்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்துக்கு தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இலவச டிக்கெட்டுக்களை வாங்கி கொடுப்பதோடு, படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணியும் போடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள்.
டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள், படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணிவாழ்க திராவிட மாடல்என பதிவிட்டுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்...
— சீமான் (@SeemanOfficial) May 23, 2022
(1/2)
முன்னதாக, உதயநிதி நடிப்பில் இயக்குநர் நெஞ்சிக்கு நீதி, தம்பி உதயநிதியின் சிறப்பான மக்கள் பணி, வாழ்க திராவிட மாடல்...என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் மே 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது இந்தியில் வெளியான 'ஆர்டிக்கிள் 15' படத்தின் ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவிழா நிகழ்வில் கண் பாதிப்புக்குள்ளான பக்தர்கள்: தென் கயிலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil
யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில் IBC Tamil