ஆணின் முக்கிய உடல் உறுப்பை வெட்டி சாப்பிட்ட ஆசிரியர் - பொதுமக்கள் அதிர்ச்சி

murder germany
By Petchi Avudaiappan Jan 12, 2022 07:56 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஜெர்மனியில்  மெக்கானிக் ஒருவரை கொலை கொலை செய்து அவருடைய ஆண் உறுப்பை வெட்டி சாப்பிட்ட ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மெக்கானிக் ஒருவர் மாயமான நிலையில் அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார், காட்டுப்பகுதியில் இடுப்பு எலும்பு ஒன்றை கண்டுபிடித்தனர். அது குறித்த விசாரணையில் அடிப்படையில் அந்த மெக்கானிக் நர மாமிசம் சாப்பிடும் தன்மை கொண்ட ஒரு ஆசிரியரால் கொல்லப்பட்டதாகவும், அவருடைய ஆண் உறுப்பை துண்டித்த அந்த ஆசிரியர் அதனை சாப்பிட்டதாகவும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதேசமயம் பெர்லினைச் சேர்ந்த 42 வயதாகும் ஆசிரியரான Stefanக்கு டேட்டிங் ஆப் மூலம் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்த 43 நபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இருவரும் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் என கூறப்படுகிறது. எனவே இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்க விரும்பி ஆசிரியரின் வீட்டுக்கு மெக்கானிக் சென்றிருக்கிறார். அன்றைய தினம், உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்த ஆசிரியர், மயங்கிய நிலையில் இருந்த மெக்கானிக்கை வெட்டிப் படுகொலை செய்து உடலை துண்டாக்கி காட்டுப்பகுதியில் வீசியிருக்கிறார்.

ஆனால் உண்மையில் அந்த ஆசிரியர் நரமாமிசம் சாப்பிடும் பழக்கமுடையவர் என கூறப்படுகிறது. மெக்கானிக்கை கொலை செய்து அவருடைய ஆண் உறுப்பை துண்டாக்கி அதனை ஆசிரியர் சாப்பிட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் மெக்கானிக் தனது வீட்டுக்கு வந்த போது இயற்கை மரணம் ஏற்பட்டதாகவும், பயத்தில் அவரின் உடலை வெட்டி வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியதாகவும் ஆசிரியர் stefan தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் ஆசிரியர் stefan வீட்டில் இருந்து ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டது, அதில் படங்களில் வருவதைப் போல உடல் பாகங்களை வெட்டும் பயங்கர ஆயுதங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.