துரைமுருகன் மருமகளின் வாக்கு சேகரிப்புக்கு அமோக வரவேற்புக் கொடுத்த பொது மக்கள்
காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் மருமகள் தீவிர வாக்கு சேகரிப்பு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
அதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு ஏரந்தாங்கள் சேர்க்காடு கூட்டு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துரைமுருகன் அவர்களின் மருமகளும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்களின் மனைவியுமான சங்கீதா கதிர் ஆனந்த் இன்று அப்பகுதியில் திமுக தொண்டர்கள் படையுடன் சென்று வீடு வீடாக சென்று தனது மாமனாருக்கு வாக்குகளை சேகரித்தார்.
அப்போது பொதுமக்களிடம் போசிய அவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் காட்பாடி நீதிமன்றம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் போன்றவற்றை காட்பாடி தொகுதி மக்களுக்காக துரைமுருகன் அவர்கள் கொண்டு வந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் துரைமுருகன் அவர்கள் வெற்றி பெற்றால் காட்பாடிக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் சிப்காட் தொழிற்சாலை உள்ளிட்டவை காட்பாடி தொகுதி மக்களுக்கு வந்து சேரும் எனவே அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக சங்கீதா கதிர்ஆனந்த் அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.