அவங்க அம்மா இல்லனா இது நடந்திருக்காது..! - பேரறிவாளன் விடுதலை குறித்து பொதுமக்கள் கருத்து

A. G. Perarivalan Supreme Court of India
By Swetha Subash May 19, 2022 01:26 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிப்பதாக நேற்று தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து பலரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்த பொதுமக்கள் தெரிவித்த கருத்தை காண்போம்.