மைசூரில் பாடகி எஸ். ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தற்போது, மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அஞ்சலி முடிந்த பிறகு, மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மேலும், எஸ். ஜானகிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.