திருவண்ணாமலையில் டிச.6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

Festival Tiruvannamalai
By Sumathi Nov 29, 2022 08:31 AM GMT
Report

திருவண்ணாமலையில் டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை

கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் டிச.6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! | Public Holiday For Tiruvannamalai Temple

மேலும், கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலைக்கு டிசம்பர் 6, 7, 8 ஆகிய தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் வருகை தருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.