"நம்ம ஆவடி நாசர்" என திமுக வேட்பாளரை வரவேற்ற பொதுமக்கள்
ஆவடி தொகுதியில் திமுகவில் போட்டியிடும் ஆவடி நாசரை நம்ம ஆவடி நம்ம நாசர் என பொதுமக்கள் வரவேற்றது திமுக தொண்டர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சா.மு.நாசர் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று டீ கடைக்களில் வாக்கு சேகரித்தார். ஆவடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் பாண்டியராஜன் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆவடி சா.மு.நாசர் களம் காண்கிறார். ஆவடி திமுக வேட்பாளர் நாசர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து டி கடையில் அமர்ந்து டீ அருந்திய படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் ஆவடி, அண்ணா நகர், சேக்காடு உள்ளிட்ட பகுதிக்கு சென்ற வேட்ப்பாளருக்கு அங்கிருந்த பொதுமக்கள் நாசரை நம்ம ஆவடி நம்ம நாசர் என வரவேற்றனர்.