வடிவேலு பட பாணியில் குளத்தைக் காணும் என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்
தமிழ் சினிமாவில் வடிவேல் கிணத்தை காணவில்லை என கூறுவது போல் பூவிருந்தவல்லி அகரமேல் கிராமத்தில் குளத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வீட்டுமனை விற்பனைக்காக காலி நிலத்தை சுத்தம் செய்து வருகிறது.
அவர்கள் நிலம் இருப்பதாக கூறி சுத்தம் செய்து வரும் நிலம் அருகே அகரமேல் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்கத் தேக்கத்தொட்டி உள்ளது.அதன் அருகே சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் ஊராட்சிக்கு சொந்தமான மூக்குத்தி குட்டை என்ற குளம் இருந்தது. இந்த குளம் கடந்த காலங்களில் 100 நாள் வேலை திட்டம் மூலம் தூர்வாரப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த குளம் இருந்த அடையாளம் தெரியாமல் மண்ணால் நிரப்பட்டுள்ளது.இதனால் குள்ளத்தை காணவில்லை என பொதுமக்கள் வருவாய் துறை மற்றும் பூவிருந்தவல்லி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் அகரமேல் ஊராட்சியில் குடிநீர் ஆதாரமாக இருந்த ஒரே குளத்தையும் தற்போது காணவில்லை.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.