திருவாரூர் - கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிப்பு
திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே துவங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் பொறுமையாக வாக்களித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் பொறுமையாக நின்று வாக்களித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் சேர்த்து மொத்தமாக 216 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 282 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இதில் 37 வாக்குசாவடிகள் பதற்றமான அடையாளம் காணப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 1,07, 425 ஆண் வாக்காளர்களும்,1,17,662 பெண் வேட்பாளர்களும்,10 இதர வாக்காளர்கள் சேர்த்து மொத்தமாக 2,25,097 பேர் மொத்தமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் பணியில் மொத்தமாக 1364 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.