Selfie With CM: நீங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம் - அசத்தல் அறிவிப்பு

M K Stalin Tamil nadu
By Sumathi Feb 28, 2023 03:58 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புது முயற்சிகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி 70வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அதனை முன்னிட்டு நாட்டின் முக்கிய எதிர்கட்சி தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,

Selfie With CM: நீங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம் - அசத்தல் அறிவிப்பு | Public Can Also Wish Cm Stalin On His Birthday

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோருக்கு பிறந்தவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து

இதனைத் தொடர்ந்து, 07127 191333 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம். இன்று மார்ச் 2 வரை வாழ்த்துகளை பதிவு செய்யலாம்.

Selfie With CM: நீங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம் - அசத்தல் அறிவிப்பு | Public Can Also Wish Cm Stalin On His Birthday

மேலும், www.selfiewithCM.com என்ற இணையதளத்துடன் QR குறியீடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுக்கலாம். இந்த புதிய முயற்சியை திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மேற்கொண்டுள்ளது.