போக்குவரத்து காவலருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்: வீடியோ வைரல்

traffic police video Karnataka
By Jon Mar 27, 2021 05:52 AM GMT
Report

கர்நாடகவில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தில் இறந்த பின் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்கும் வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மைசூர் செக்-போஸ்ட் அருகிலுள்ள சாலையில் நடந்த விபத்தில் இரு சக்கர வண்டியில் வந்த இருவர் வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது இரு சக்கர வண்டியை போலீசார் நிறுத்த முயற்சி செய்தனர். இதனால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் வாகனத்திலிருந்து கீழே விழுந்தார்கள். கீழே விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆனால், போக்குவரத்து போலீசார் தடுத்ததால்தான் இந்த சம்பவம் நடந்துவிட்டத்தாக பொதுமக்கள் நினைத்துக் காவலர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் அடி வாங்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

போக்குவரத்து காவலருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்: வீடியோ வைரல் | Public Blow Traffic Police Video Viral

இதுகுறித்து மைசூர் நகர காவல்துறையினர் பேசுகையில், இருவரும் பயணித்த வாகனம் லாரி ஒன்றின் மீது மோதியதில்தான் அவர் உயிரிழந்தார். அந்த சம்பவத்துக்கும் காவலருக்கும் சம்மந்தம் இல்லை. லாரி ஓட்டுநர் மீது ஐ.பி.சி 304A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மக்களால் தாக்கப்பட்ட மூன்று அதிகாரிகளும், இச்சம்பவம் தொடர்பாக வெவ்வேறு பிரிவுகளின் கீழ் புகார்கள் அளித்திருக்கிறார்கள். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மைசூர் நகர காவல்துறையினர் தெரிவித்தனர்.