சுதந்திர தின அணி வகுப்பு விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி - தமிழக அரசு அனுமதி..!
வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர அணி வகுப்பு தின விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிகரித்த கொரோனா தொற்று
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்றால் சுதந்திர அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அரசு விழாக்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் எப்போதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நடைபெறும்.
பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி
அங்கு காவலர் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். சுதந்திர அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில்,
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக அரசு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்பொது மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் இதில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அனிந்து வர வேண்டும் என்றும் சிறுவர்கள்,முதியவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதியில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.