நான் என்ன Prime Minister-ஆ செய்தியாளர்களிடம் சீறிய பப்ஜி மதன்!
பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் பப்ஜி மதன். தலைமறைவான இவரை நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து மதனை சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சோதனை நடத்தினர். இதனையடுத்து கைது செய்த மதனை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது ஊடக ஒளிப்பதிவாளர்கள், பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் கூடி நின்று மதனை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது மதன் "நான் என்ன ப்ரைம் மினிஸ்டரா,என்ன வளச்சு வளச்சு எடுக்கிறீங்க" என கேட்டார்.அப்போது காவல் ஆய்வாளர் மதனை "நீ அக்யூஸ்ட் வா" எனக் கூறி அழைத்துச் சென்றார்.
இந்தநிலையில் மதனிடம் விசாரணையில் ஈடுபட்டு வரும் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த சைத்தாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம்
ஜுலை 3 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து பப்ஜி மதன் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.