வாயால் கெட்ட பப்ஜி மதன்..கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை.. Youtube சேனல்கள் முடக்கம்!

Youtube Pubg Madhan
By Thahir Jun 21, 2021 07:18 AM GMT
Report

ஆபாச பேச்சு மதனின் Youtube சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.

வாயால் கெட்ட பப்ஜி மதன்..கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை..  Youtube சேனல்கள் முடக்கம்! | Pubg Madhan Youtube

சென்னை ஆபாசப்பேச்சு. பெண்கள், சிறுமிகளை தகாத வார்த்தைகளில் பேசுவது, பண மோசடி என பப்ஜி மதன் மீது ஆன்லைனில் குவிந்த புகார்களையடுத்து மதனின் மனைவி கிருத்திகா முதலில் கைதுசெய்யப்பட்டார். தருமபுரியில் பிடிபட்ட மதன் தற்போது பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வரும் 3 ஆம்தேதி வரை காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கைதான மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் உள்ளது. தாம்பரம், பெருங்களத்தூரில் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 வீடுகள் உள்ளன. 2 ஆடம்பரக் கார்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளையும் மதன் வாங்கிக் குவித்துள்ளார்.

இந்நிலையில், ஆபாச பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 'பப்ஜி' மதனின் யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.