பப்ஜி மதன் மீதான குண்டாஸை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்
மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதாக பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார்.
மேற்கண்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கில் ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர், ஜூலை 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
தன்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்கக் கோரி பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் வாதாடியிருந்தார். ஆனால், இறுதியில் அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதிசெய்துள்ளது.