ஆபாச பேச்சாளர் பப்ஜி மதன் மீது குவியும் பண மோசடி புகார்!

Arrest Tamilnadu Pubg Madhan
By Thahir Jun 21, 2021 08:47 AM GMT
Report

பெண்களை ஆபாசமாக பேசியது,சிறுமிகளை தவறாக சித்தரித்து பேசியது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட மதன் மீது புகார் தெரிவிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இமெயில் முகவரி அளித்திருந்தனர். இந்தநிலையில் மத்திய குற்றப்பிரிவு அறிவித்த இ-மெயில் முகவரிக்கு 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபாச பேச்சாளர் பப்ஜி மதன் மீது குவியும் பண மோசடி புகார்! | Pubg Madhan Arrest

மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக தமிழகம் முழுவதும் இருந்து புகார்கள் குவிந்துள்ளதால் பப்ஜி மதன் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது. எனவே பப்ஜி மதன் பலரை ஏமாற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக தகவல்.