ஊரடங்கு காலத்தில் உதவி செய்வதாக கூறி - மக்களிடம் சுமார் 2.89 கோடி ரூபாய் சுருட்டிய பப்ஜி மதன்

Pubg Madan Kruthika Youtuber Madan
By Thahir Sep 07, 2021 03:11 AM GMT
Report

சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள மூன்று கோடி ரூபாய் பணத்தை மீட்டு தர வேண்டும் என பப்ஜி மதனின் மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் பெண்களை இழிவுப்படுத்தி பேசி யூ ட்யூபில் பதிவிட்டதாக மதன் உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில், பப்ஜி விளையாட்டில் மதனை பின் தொடரும் சிறுவர், சிறுமியர் உட்பட இளைஞர்களிடம் இயலாதவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி பணம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் உதவி செய்வதாக கூறி - மக்களிடம் சுமார் 2.89 கோடி ரூபாய் சுருட்டிய பப்ஜி மதன் | Pubg Madan Kruthika Case

அதனடிப்படையில், பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கில் இருந்த சுமார் 4 கோடி பணத்துடன் முடக்கப்பட்டது.   

இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் தற்போது மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிபந்தனை வெளியில் வந்த மதனின் கிருத்திகா, தங்களிடம் உள்ளது ஆடி கார்தான் சொகுசு கார் இல்லை எனவும், தனது கணவர் 24 மணி நேரமும் உழைத்து சம்பாதித்த காசு எனவும் பேசியது சர்ச்சையானது.

இந்த நிலையில் மதனின் மனைவி கிருத்திகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அபிராமபுரம் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் உள்ள தனது கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால், வங்கி கணக்கி உள்ள சுமார் 3 மூன்றரை கோடி பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறும் போது, ஊரடங்கு காலத்தில் பலருக்கும் உதவி செய்வதாக இரண்டாயிரத்து 848 நபர்களிடம் சுமார் 2.89 கோடி ரூபாய் பணத்தை பெற்று அந்த பணத்தை அபிராமபுரம் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் உள்ள கிருத்திகாவின் வங்கி கணக்கிற்கு மதன் பரிவர்த்தனை செய்திருப்பதாகவும், பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோசடி பணத்தை பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தான் திருப்பிக் கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் எனவே இந்த பணத்தை திருப்பி கொடுக்கக் கூடாது எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ டியூப் வருவாய் மூலம் வெறும் 31 லட்சம் தான் அவர்களுக்கு கிடைத்த வருவாய் எனவும், மீதமுள்ள தொகை மோசடி பணம் என காவல் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பப்ஜி மதனின் மோசடி குறித்த ஆதாரங்களை வரும் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.