“பப்ஜி மதனின் பேச்சில் நச்சுத்தன்மை உள்ளது, அவரை ஏன் வெளியில் விட வேண்டும்?” - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
பப்ஜி மதனின் பேச்சு நச்சுத்தன்மை உடையதாக உள்ளது, அவரை ஏன் வெளியில் விட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் சிறுவர்களிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பப்ஜி மதன் கைதுசெய்யப்பட்டு கடந்த 7 மாதங்களாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
இந்நிலையில், பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யும் மனுவை உடனே விசாரிக்கக்கோரி அவருடைய மனைவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் பப்ஜி மதனின் பேச்சு நச்சுத்தன்மை உடையதாக உள்ளது, அவரை ஏன் வெளியில் விட வேண்டும் என உயநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கிருத்திகா தொடர்ந்திருந்த வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பப்ஜி மதனின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும் அவருக்கு ஃபிசியோத்தெரப்பி சிகிச்சை மட்டுமே தேவைப்படுகிறது எனவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.