பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
பணம் சம்பாதிக்கும் நோக்கில் பப்ஜி விளையாட்டில், பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசிய மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு.
மதன் தன்னுடைய யூடியூப் தளத்தில் பதிவேற்றியுள்ள வீடியோக்களில் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு, அதன் மூலம் பெரும் தொகையை மோசடி செய்துள்ளார் எனப் புகார் எழுந்துள்ளது.
தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டை சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையசேவை மூலம் பயன்படுத்தியது, விளையாட்டின்போது பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசியது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததை அடுத்து பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மதன் முன் ஜாமீன் கோரி வரும் இந்த நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.