பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை - லீக்கான ஆடியோவால் பரபரப்பு
சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சகல வசதிகளை செய்து கொடுக்க அவரது மனைவியிடம் சிறை அதிகாரி லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியான நிலையில் ஆடியோவின் உண்மை தன்மை குறித்து சிறைத்துறை டிஜிபி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தடைசெய்யபட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி அதை யூடியூப் மூலம் நேரடி ஒளிப்பரவு செய்ததுடன் அதில் சிறுவர்கள் குறித்து ஆபாசமாக பேசியதாக வந்த புகார்களை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த மதனின் மனைவி கிருத்திகா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து கிருத்திகா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனிடையே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளை செய்து கொடுக்க அவரது மனைவியிடம் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி சிறை அதிகாரிகளுடன் மற்றும் பணியில் உள்ள காவலர்கள், ஆய்வாளர்கள், சிறை வார்டன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.