“ஏன்மா இப்படி மானத்தை வாங்குற..நம்ம கிட்ட இருக்கிறது சொகுசு கார் தான்” மனைவிக்கு பப்ஜி மதன் அட்வைஸ்!
யூ டியூப் லைட் ஸ்டீமிங்கில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடியதுடன், ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக பப்ஜி மதன் என்பவர் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவரது மனைவி கிருத்திகா பப்ஜி மதனின் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பப்ஜி மதனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் மதன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்திருந்தனர். நாங்கள் தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடவில்லை. கொரியா வெர்ஷனை தான் விளையாடினோம். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு தவறு செய்யவில்லை. சாதாரண பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என விவாதிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மதனை மீண்டும் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்ற போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது சில மீட்டர் தூர இடைவெளியில் மதனும்
அவரது மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியிடம் பேசிய மதன், நாம் வைத்திருப்பது சொகுசு கார் தான்; வெளியில் யாரிடமும் இது சொகுசு கார் இல்லை என்று சொல்லாதே . வக்கீலை வைத்து
காவல் நிலையத்தில் உள்ள காரை வெளியில் எடுக்கும் முயற்சியை செய் என்று அறிவுரை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.