பப்ஜி விளையாட கூடாது எனக் கூறிய குடும்பத்தினரை சுற்றுக்கொன்ற சிறுவன்

Murder Pakistan Arrest Child Pubg Game
By Thahir Jan 28, 2022 11:40 PM GMT
Report

பப்ஜி விளையாட்டு குறித்து தட்டிக்கேட்ட தாய் மற்றும் குடும்பத்தினரை 14 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் வசித்து வருகிறான்.சிறுவனின் தாயார் 45 வயதான நஹித் முபாரக், சுகாதாரப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் தாய் நஹித் முபாரக்,அவரது மகன் மற்றும் இரு மகள்களுடன் சடலமாக கிடந்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பப்ஜி விளையாட்டை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.