‘இதற்கு பெயர் நேர்மை’ - நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

nirmalasitharaman ptrpalanivelthiagarajan
By Petchi Avudaiappan Aug 17, 2021 03:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

  தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி 2021-22 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வெளியானது. இதில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. வரி லிட்டருக்கு ரூ.7 உயர்த்தப்பட்டு இப்போது ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. நான் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அது மாநில அரசுகளின் முடிவு' எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2016ஆம் ஆண்டு முதல் மற்றும் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களுக்கான இடையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அதிமுக அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு இரண்டு கட்டங்களாக ரூ.7 உயர்த்தியிருந்தது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்து வாதம் செய்தது. தற்போது திமுக அரசு அமைந்துள்ளது. மேலும், பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இதற்கு பெயர் நேர்மை. தந்திரம் அல்ல என தெரிவித்துள்ளார்.