பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

Dmk Ptr Palanivel Thiyagarajan Petrol Price
By Thahir Jun 20, 2021 08:51 AM GMT
Report

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல் மீது ரூ.10ஆக இருந்த வரியை மத்திய அரசு ரூ.32.90ஆக உயர்த்தியுள்ளது. மேலும் மத்திய அரசு பெட்ரோல் மீதான ரூ.32.90 வரியில் ரூ.31.50ஐ தானே எடுத்துக்கொள்கிறது. இப்படி மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய வரித்தொகையை முறையாக தர மறுக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளதால் பெட்ரோல், டீசல் விலையில் மாநில வரியைக் குறைப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.