பறிக்கப்படும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி - புதிய அமைச்சர் யார் தெரியுமா?
வரும் புதன்கிழமை நிதியமைச்சராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 3ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் நாளை வரை நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே திமுக பொதுக்கூட்டத்தில் பேசுவோர் பட்டியலில் அனைத்து அமைச்சர்களின் பெயர்களும் முதலில் இடம் பெற்றிருந்தன.
அதில் மதுரை சிம்மக்கல் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் திடீரென அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் பிடிஆர் கலந்து கொள்ளவில்லை.
அமைச்சர் பதவி பறிப்பா?
இதனால் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எனவே நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
பின்னர் அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது இந்த விவகாரத்தால் அவர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகிற புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைக்க கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில இலாக்காக்கள் பறிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படலாம் என்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.