மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போயிடுச்சா? ஆத்திரம் அடைந்த பி.டி.ஆர்
உத்திரபிரதேச மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45-வது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அவரின் உரை அக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் அக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக நிதி செயலாளரும் வணிக வரி ஆணையாளரும் கலந்துகொண்டனர்.
ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்தில், எனக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு வந்தது, அதோடு எதை பற்றி கூட்டத்தில் விவாதிக்க போகிறோம் என்பது குறித்த விவரங்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென நேரடியாக லக்னோ வர சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார். இதனிடையே, தனது கொளுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் தான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி.எஸ்.டி.கூட்டத்திற்கு செல்லவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாக கூறி சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.
இதனிடையே, இதுபோன்ற விமர்சித்த ஒரு பதிவிற்கு பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், வடிகட்டிய முட்டாள்தனம்.
கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும். பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா? என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனி விமானம் இல்லாததால், கூட்டத்திற்கு செல்லவில்லை என்று வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர், ஒன்றுக்கொன்று முறன்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே நான் கூட்டத்திற்கு செல்லாதது இல்லாத விழாவிற்காகவா?
அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? கூட்டம் டெல்லியிலா? லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே என்று கண்டித்துள்ளார்.