தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் குறித்து மாநில அரசிடம் ஒன்றிய அரசு வழங்கவில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

Minister PTR Palanivel Thiagarajan
By Thahir Jun 29, 2021 11:12 AM GMT
Report

தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் குறித்து மாநில அரசிடம் ஒன்றிய அரசு வழங்கவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை ஒன்றிய வழங்கினால் 3வது அலையை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் குறித்து மாநில அரசிடம் ஒன்றிய அரசு வழங்கவில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! | Ptr Minister Dmk Palanivelthiagarajan

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தித்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மதுரையில் நேற்று 14 ஆயிரம் செய்த கொரோனோ பரிசோதனையில் 74 பேருக்கு மட்டுமே தொற்று என வந்துள்ளது,2 ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் 3 ஆம் அலையை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்,2ஆம் அலையின் பொழுது மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டது.

மதுரையில் 3 ஆம் அலையை எதிர்க்கொள்ள முன் மாதிரியாக பைலட் புராஜக்ட் ஒன்றை உருவாக்க உள்ளோம்,தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகள், முதியோர் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 3ம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசி செலுத்திய பகுதிகளில் 3 ஆம் அலை வர வாய்ப்பு இல்லை.எங்கே 3ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.கோவின் செயலி ஒன்றிய அரசின் செயலி என்பதால் மாநில அரசிடம் தடுப்பூசி குறித்த தகவல் இல்லை.

தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே உள்ளது, யார் யாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் மாநில அரசிடம் ஒன்றிய அரசு வழங்கவில்லை, தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை ஒன்றிய அரசிடம் கோர உள்ளோம்.

மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்பட்ட விபரங்களை நாளை முதல் மாவட்ட நிர்வாகம் சேகரிக்க உள்ளது, தடுப்பூசி செலுத்தும் விபரங்களை அனைத்து இடங்களுக்கும் பகிர்வது தான் கூட்டாச்சி தத்துவம், தடுப்பூசி செலுத்திய 70 சதவீதம் தகவல்கள் மட்டுமே மாநில அரசிடம் உள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் முன்மாதிரியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுபவர்களின் விபரங்களை கோவின் இணையதளம் போன்று சேகரிக்க திட்டமிட்டுள்ளது.எந்த தடுப்பூசியை யார் பயன்படுத்துவது என்பதை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபாடு இருக்க கூடாது. தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை ஒன்றிய வழங்கினால் 3வது அலையை எளிதில் கட்டுப்படுத்த முடியும்,ஒரு திட்டத்தை ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி செயல்படுத்தினாலும் திட்டத்தின் முழு தகவல்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே இருக்கும்,ஒன்றிய அரசிடம் உள்ள தகவல்களை மாநில அரசுக்கு கொடுத்தால் தான் நடவடிக்கைகள் எடுக்க முடியும், இதுவே கூட்டாச்சி தத்துவம்.

ஸ்புட்னிக் தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து கொடுத்தால் இலவசமாக செலுத்த தயராக உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.