தமிழக பட்ஜெட் தாக்கலில் உக்ரைன் போர் விவகாரம் ஏற்படுத்திய தாக்கம்

ukrainewar tnbudget22-23 warimpactintnbudget dmkministerptr
By Swetha Subash Mar 18, 2022 12:20 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

உக்ரைன் போர் சூழல் தமிழக பட்ஜெட்டில் எதிரொலித்துள்ளது!!

இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2022 - 23ம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

உக்ரைன் போர் காரணமாக பணவீக்கம், வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறியதை எடுத்துரைத்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் வரும் நிதியாண்டில், மாநில மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.61 %ல் இருந்து 3.80 சதவீதம் ஆக குறையும் எனவும், இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றதும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளதாகவும்,

கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று கோவிட் பெருந்தொற்றின் 2 மற்றும் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தற்போது 4.61% ல் இருந்து 3.8% ஆக குறையும்.வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.

மாநில உரிமைக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பணிகள் பாதிக்கப்படும்.

வரும் நிதியாண்டு பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உக்ரைன் போர் காரணமாக பணவீக்கம், வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர் ஆகியவைகளை பட்ஜெட் தாக்கலில் எடுத்துரைத்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.