உங்களுக்கு IQ லெவல் குறைவா?.. வானதியை பிளாக் செய்த பிடிஆர்.. நடந்தது என்ன?

vanathisrinivasan ptr gst CongenitalLiarVanathi
By Irumporai May 31, 2021 09:46 AM GMT
Report

தேர்தல் முடிந்த பிறகு அரசியல் சார்ந்த பதிவுகள் ட்ரெண்ட் ஆகத நிலையில் நேற்று இரவிலிருந்து # CongenitalLiarVanathi என்றா ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதன் காரணம் என்ன? காண்போம் இந்த தொகுப்பில்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோவாமாநிலத்தை அவமதித்ததும் வகையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகவும் அதற்காக பிடிஆர் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு விளக்கமளித்த பிடிஆர் நடந்தவற்றை விளக்கி கூறி, தான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என கூறினார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசனால் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது இந்த விவகாரம்.

   வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பதிவில் ஜிஎஸ்டி கவுன்சிலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் நமது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானம் என கூறியுள்ளார்.

மேலும் கோவா போக்குவரத்துத் துறை அமைச்சரை விமர்சனம் செய்வதால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. ஆகவே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் , கோவா போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, ட்விட்டரில்  பதிவிட்டிருந்தார்.


வானதியின் ட்விட்டர் பதிவை  பார்த்து கோபமான அமைச்சர்  தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் பொய்களுடன் என்னை ட்விட்டரில் டேக் செய்வதை நிறுத்துங்கள்என பதிவிட்டிருந்தார்.

மேலும், ஏதாவது பயனுள்ள பணிகளை செய்யுங்கள். நீங்கள் பிறவியிலேயே பொய்யரா இல்லை உங்களுக்கு உண்மையில் IQ திறன் குறைவா? ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் யாரையும் அவமதித்துவிடலாம் என நினைக்கிறீர்களா? என கூறிய பிடிஆர்.

 ‘’ஒரு கெட்ட வாசனையைத் தவிர்க்க, வீட்டின் ஜன்னலை மூடுவதைப் போல நான் உங்களை பிளாக் செய்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பேசபட்டு வருகிறது.

  வானதி சீனிவாசனை பிளாக் செய்ததை கண்ட ட்விட்டர்வாசிகள், என்னங்க மேடம் இப்படி ஆயிடுச்சே? என கிண்டல் செய்து# CongenitalLiarVanathi என்ற ஹேஷ் டேக்கினையும் பதிவிட்டு வருகின்றனர்.