பிடிஆர் ஆடியோ விவகாரம் : மட்டமான அரசியல் செய்வோருக்கு பதில் கூற விரும்பவில்லை : முதலமைச்சர் பளீச் பதில்

M K Stalin DMK
By Irumporai May 02, 2023 03:52 AM GMT
Report

பிடிஆர் ஆடியோ வைத்து மட்டமான அரசியல் செய்வோருக்கு பதில் கூறி விளம்பரம் கொடுக்கவில்லை என கூறினார்.

 உங்களில் ஒருவன்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வப்போது பொதுமக்களின் கேள்விகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அதற்கு உங்களின் ஒருவன் எனும் நிகழ்வின் மூலம் காணொளி வாயிலாக பதில் கூறுவது வழக்கம் அந்த வகையில் தற்போது உங்களின் ஒருவன் வீடியோ வெளியாகி உள்ளது.

 கேள்விகளுக்கு பதில்

அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பற்றிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது பற்றிய கேள்விக்கு , முதல்வர், இதுகுறித்து 2 முறை தண்னிடம் நிதியமைச்சர் விளக்கம் அளித்து விட்டார். எங்களுக்கு மக்கள் பணிகள் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. இந்த நேரத்தில் மட்டமாக அரசியல் செய்யும் நபர்களுக்கு பதில் கூறி அவர்களை விளம்பரப்படுத்த விரும்பவில்லை என தனது பதிலை கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிடிஆர் ஆடியோ விவகாரம் : மட்டமான அரசியல் செய்வோருக்கு பதில் கூற விரும்பவில்லை : முதலமைச்சர் பளீச் பதில் | Ptr Audio Chief Minister M K Stalin

வெறுப்புணர்ச்சியை திணிக்கிறது

முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி ஒரு ஆடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த ஆடியோ குறித்து தனது விளக்கத்தையும் பழனிவேல் தியாகராஜன் கூறி இருந்தார். மேலும், 2 முறை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாஜக வெறுப்புணர்ச்சியை திணிக்கிறது - பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துதெரிவித்துள்ளார்.