காண்போரை காதலிக்க மிரட்டும் காமுகன்! காதலியின் தோழி வைத்த வேட்டு!
ஆட்டோவில் வரும் இளம்பெண்களிடம் மனைவி, தன்னை ஏமாற்றி சென்று விட்டதாக கூறி அவர்களை காதலிக்க சொல்லி தன் கையை அறுத்து கொண்டு மிரட்டும் காதல் சைகோ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியை சேந்த ரோசி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம், பெணி முடிந்து வீடு திரும்பிய போது, தனது தோழியின் காதலனும், ஆட்டோ டிரைவருமான தினேஷ் என்பவர், ரோசியை வீட்டில் விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார்.
ஆனால் வீட்டிற்கு செல்லாம, எண்ணூர் கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு வைத்து ரோசியிடம், தன் மனைவி தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாகவும், உன்னை பார்த்தால் என் மனைவி போலவே உள்ளது என அடுக்கடுக்காக வசனங்களை அள்ளி தெளித்துள்ளான். மேலும் இதனால் நான் மிகுந்த கவலையில் உள்ளேன், எனவே நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் கையை அறுத்து ரோசியை கட்டாயப்படுத்தியுள்ளான்.
ஏற்கனவே இதே நாடகத்தை தன் தோழியிடம் அரங்கேற்றியதை உணர்ந்த ரோசி, எதற்கும் மசியாமல் அவரது தாயாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், ரோசியை கத்திமுனையில் கடத்தி சென்றுள்ளான். ரோசியுடன் பல இடங்களுக்கு ஆட்டோவில் சென்ற தினேஷ், கஞ்சா போதையில் இரவு நேரத்தில் உறங்கி கொண்டிருந்தார்.
இது தான் நேரம் என ரோசியும் அங்கிருந்து தப்பி சென்று 70 வயது முதியவரிடம் தஞ்சமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து தொலைபேசி மூலமாக தான் இருக்கும் இடத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார் ரோசி. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரோசியை மீட்டு தினேஷ் மற்றும் அவனது கூட்டாளி இம்ரானை கைது செய்தனர்.
விசாரணையில் 3 வருடங்களுக்கு முன்பு தினேஷின்
கொடுமை தாங்காமல் அவரது மனைவி ஒடிப்போனதாகவும், இந்த
கதையை வைத்து, இளம்பெண்களிடம் நெருங்கி பழகி, அவர்களின்
வாழ்க்கையை சீரழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்
இதையடுத்து, தினேஷ் மற்றும் இம்ரான் மீது போலீசார், வழக்குப்பதிவு செய்து
சிறையில் அடைத்தனர்.