பிஎஸ்எல்வி. சி-54 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

By Irumporai 2 மாதங்கள் முன்

பி. எஸ். எல். வி. சி- 54 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இன்று விண்ணில் பி. எஸ். எல். வி. சி- 54 இஸ்ரோ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை வடிவமைக்கின்றது.

ராக்கெட்டின் நோக்கம்

இஸ்ரோ சார்பில் பி. எஸ். எல். வி. சி 54 ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் ஓசன் சாட் 3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் எட்டு சிறிய வகை நானோ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

பிஎஸ்எல்வி. சி-54 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது | Pslv The C 54 Rocket Is Being Launched Today

இந்த பி. எஸ். எல். வி. சி 54 ராக்கெட் நான்கு நிலைகளைக் கொண்டது . ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படுகின்ற திறனை கொண்டது. பி. எஸ். எல். வி. ராக்கெட்டில் இது 56வது திட்டப்பணி ஆகும்.