வெற்றிகரமாக ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி52 ராக்கெட் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலக நாடுகள் பாராட்டு

Launched PSLV C52 rocket ISRO Scientific பி.எஸ்.எல்.வி சி52 ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகள்
By Nandhini Feb 14, 2022 03:50 AM GMT
Report

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் புவி கண்காணிப்புக்கான செயற்கைக்கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் ஈஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளும், இன்ஸ்பயர் சாட்-1 மற்றும் ஐ.என்.எஸ்-2டிடி என்ற 2 சிறிய வகையிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன. விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் பூவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்டுக்கான 25 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து, இன்று காலை 5.59 மணிக்கு 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தச் செய்ற்கைக்கோள்களில் பூமியில் விவசாயம், வனம், வெள்ளம் போன்றவற்றை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமரா இருக்கிறது.

புவியை கண்காணிக்கவுள்ள இந்த செயற்கைக்கோளின் மொத்த 1,170 கிலோவாகும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் மொத்தம் 10 ஆண்டுகளாகும். இஸ்ரோ தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள சோம்நாத் தலைமையில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுதான்.

இதேபோல், இந்த ஆண்டில் (2022) இஸ்ரோவால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோளாகும். பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகிறது.