பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியர் புகாரில் தீவிர விசாரணை நடத்த தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை..!
students
kamal
mnm
psbb school case
sexual haraase
By Anupriyamkumaresan
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியர் புகாரில் தீவிர விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில்,தமிழக அரசு திவீர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.