ஏ.ஆர்.ரகுமானை வெளியேற்றியதா பிஎஸ்பிபி பள்ளி? வைரலாகும் வீடியோ!

ar rahuman psbschool
By Irumporai May 25, 2021 11:12 AM GMT
Report

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள்கொடுத்த பாலியல் குற்றச்சாட்டினால், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாலியல் புகாரினால் பரபரப்பாக பேசப்படும் பிஎஸ்பிபி பள்ளி, ஒரு காலத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையும் அவமதித்தாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனது பள்ளி நாட்கள் குறித்து ஏ.ஆர் ரகுமான் கொடுத்த பழைய பேட்டிதான் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் தனது பள்ளி நாட்கள் குறித்து கூறும் ஏ.ஆர் ரகுமான்  தனது அப்பாவின் மறைவை தொடர்ந்து பள்ளி தேர்வுக்கு சரியாக கட்டணம் செலுத்த முடியவில்லை.

தங்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை ரகுமான் பள்ளி நிர்வாகத்திடம் சொல்லி இருக்கிறார்.

அவர்களோ பீஸ் கட்டினால் தான் தேர்வு எழுத முடியும் என்று கூறியுள்ளனர். பிறகு ரகுமான் தனது அம்மாவை அழைத்து சென்று பேசியும் பள்ளி நிர்வாகம் கடுமையாக பதில் அளித்துள்ளது.

அவர்கள் ரகுமானின் அம்மாவிடம் பீஸ் கட்ட முடியவில்லை என்றால் கோடம்பாக்கம் பிளாட்பார்மில் போய், யாரிடம் இருந்தாவது காசு கிடைக்குமா? என்று கேட்டு பாருங்கள் என்று கூறியதாக ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார்.


ஆனால் தமது பேட்டியில் பள்ளியின் பெயரை குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் தற்போது பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் இந்த சமயத்தில்.

கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்த ஏ.ஆர்.ரகுமானை  வெளியேற்றியது இந்த பள்ளிதான் என இணைய வாசிகள் ஆணித்தரமாக கூறி வருகின்றனர்.

தனது கடின உழைப்பால் ரகுமான் ஆஸ்கர் வாங்கிய போது,பீஸ் கட்டவில்லை என்று ரகுமானை ஓரம்கட்டியாதாக கூறப்படும் அதே பிரபல பள்ளிதான் எங்களின் முன்னாள் மாணவர்என்று விளம்பரம் செய்தது நாம் அறிந்த கதைதான்.